கீழ்கொவளைவேடு கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்

கீழ்கொவளைவேடு கிராமத்தில் சாலை அமைக்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்ட காட்சி.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்ட காட்சி.
Published on

வந்தவாசி:

வந்தவாசியை அடுத்த கீழ்கொவளை வேடு, பழைய காலனி பகுதியில், துர்க்கை அம்மன் கோவிலிலிருந்து ராட்டினங்கிணறு வரையில் சிமெண்டு சாலை அமைப்பதற்காக 4 மாதங்களுக்கு முன்பு டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. இதற்காக ஏற்கனவே இருந்த சாலை தோண்டப்பட்ட நிலையில் பணிகள் முடங்கின. தற்போது மழைக்காலம் தொடங்கி விட்டதால் அந்த பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகிறார்கள். எனவே உடனடியாக சாலை அமைக்கக் கோரி விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலர் பணிகள் நாளை முதல் துவங்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தில், தொகுதி செயலாளர் மேத்தா ரமேஷ், வந்தவாசி நகர செயலாளர் இனியவன், இளம்சிறுத்தைகள் செயலாளர் அன்பரசு, இளங்கோ, ஏழுமலை, சிலம்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com