கீழ்பென்னாத்தூர் அருகே படிக்கட்டில் தவறி விழுந்தவர் பலி

கீழ்பென்னாத்தூர் அருகே படிக்கட்டில் தவறி விழுந்தவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணம்
மரணம்
Published on

கீழ்பென்னாத்தூர்:

கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள மேக்களூரை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 56). நேற்று முன்தினம் இவரது மளிகை கடையில் குளிர்பான பாட்டில்களை மாட்டுவதற்காக ஸ்டூல் மீது ஏறி நின்றுகொண்டு மாட்டிக் கொண்டிருந்தார். அப்போது, கால் தவறி அருகிலிருந்த படிக்கட்டில் விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து, கீழ்பென்னாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com