விழுப்புரம் அருகே பிளஸ்-2 மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்: சென்னை வாலிபர் கைது

பிளஸ்-2 மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சென்னை வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கைது
கைது
Published on

திருவெண்ணைநல்லூர்:

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த 17 வயது பிளஸ்-2 மாணவி ஒருவர் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூர் அருகே அரும்பட்டு கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார்.

இந்த நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்று வருவதாக கூறி சென்ற மாணவி நீண்டநேரமாகியும் வீடு திரும்ப வில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடிய வில்லை.

இதுகுறித்து திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் மாணவியின் உறவினர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த அற்புதராஜ் (வயது 21) என்பவர் பிளஸ்-2 மாணவியை கடத்தி சென்றிருப்பது தெரியவந்தது.

அதன்பேரில் போலீசார் வியாசர்பாடிக்கு விரைந்து சென்றனர். அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மாணவியுடன் தலைமறைவாக இருந்த அற்புதராஜை போலீசார் பிடித்து திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

அப்போது மாணவியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அந்த மாணவியை அற்புதராஜ் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவி தெரிவித்தார். இதையடுத்து அந்த மாணவியை சிகிச்சைக்காக முண்டியம் பாக்கம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பிவைத்தனர்.

பிளஸ்-2 மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த அற்புதராஜை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com