சங்கராபுரம் அருகே சிறுமி கடத்தல்- வாலிபருக்கு வலைவீச்சு

சங்கராபுரம் அருகே கடையில் மளிகை பொருட்கள் வாங்க சென்ற சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கடத்தல்
கடத்தல்
Published on

சங்கராபுரம்:

சங்கராபுரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி அதே ஊரில் உள்ள கடையில் மளிகை பொருட்கள் வாங்க சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பிவராததால் அதிர்ச்சி அடைந்த அவளது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமியை காணவில்லை.

விசாரணையில் அதே கிராமத்தை சேர்ந்த குள்ளன் மகன் சரத்குமார்(வயது 26) சிறுமியை கடத்தி சென்று இருப்பதாகவும், இதற்கு அவரது அண்ணன்கள் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

இது குறித்து சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தேவமூர்த்தி வழக்குபதிவு செய்து வாலிபருடன் சிறுமியையும் தேடி வருகின்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com