கேரளாவில் மதுபானங்கள் விலை 7 சதவீதம் உயருகிறது

கேரளாவில் மதுபானங்களின் விலை 7 சதவீதம் உயர்வு, பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வரலாம் என தெரிகிறது.
மதுபானம்
மதுபானம்
Published on

திருவனந்தபுரம்:

கேரளாவில் அரசே மது விற்பனை செய்து வருகிறது. இதற்காக அமைக்கப்பட்ட கேரள மது விற்பனை வாரியம் மதுபானங்களின் விலையை அதிகரிக்க வேண்டுமென்று கடந்த பல மாதங்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்தது.

மதுபான உற்பத்தி ஆலைகளும் இதே கோரிக்கையை வலியுறுத்தி வந்தன. அவர்கள் மதுபானங்களின் விலையை 15 சதவீதம் அளவுக்கு உயர்த்த வேண்டும் எனக்கூறியிருந்தனர்.

இந்த நிலையில் கேரள மாநில மதுபான விற்பனை வாரியத்தின் இயக்குனர்கள் கூட்டம் நேற்று நடந்தது. அதில் மதுபானங்களின் விலையை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அந்த நிலையில் மதுபானங்களின் விலையை 7 சதவீதம் அளவுக்கு உயர்த்த ஒப்புக்கொள்ளப்பட்டது.

இயக்குனர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அரசின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இனி அரசு பரீசிலித்து இறுதி முடிவு எடுக்கும்.

தற்போதைய நிலையில் மதுபானங்களின் விலை 7 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டால், ஒரு மது பாட்டிலின் விலை சுமார் ரூ.150 வரை உயரும். இந்த உயர்வு பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வரலாம் என தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com