

திருவனந்தபுரம்:
ஆன்லைனில் ஏராளமான வீடியோ கேம் விளையாட்டுக்கள் உள்ளன. இதில் ரம்பி விளையாட்டு இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது.
ரம்மி விளையாட்டு பந்தயம் சூதாட்டம் போல் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஈடுபடுபவர்கள் பணத்தை இழந்து மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கு தூண்டப்படுகிறார்கள் என புகார்கள் எழுந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்ட கேரள இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக மலையாள சினிமா இயக்குனர் பாலிவடக்கன் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். அதில் இந்த விளையாட்டுகளை தடை செய்ய கோர்ட்டு உத்தரவிடகோரி இருந்தார்.
வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட்டு ஆன்லைன் விளையாட்டுக்களை பந்தயம் மற்றும் சூதாட்ட சட்டத்திற்கு கீழ் கொண்டு வர உத்தரவிட்டு உள்ளது. 2 வாரத்திற்குள் இது தொடர்பாக முடிவு செய்யுமாறும் கேரள அரசுக்கு உத்தரவிட்டது.
ஏற்கனவே ரம்மி ஆன்லைன் விளையாட்டு தொடர்பான விளம்பரத்தில் நடித்த கிரிக்கெட் வீரர் வீராட் கோலி, நடிகை தமன்னா உள்ளிட்டோருக்கு விளக்கம் அளிக்க கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.