கெலமங்கலம் அருகே தீக்குளித்து தொழிலாளி தற்கொலை

கெலமங்கலம் அருகே மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

ராயக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியம் தடிகல் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் எல்லப்பன். இவருடைய மகன் சக்திவேல் (வயது 28). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ரஞ்சிதா (25). இவர்களுக்கு 1½ வயதில் மகாலட்சுமி என்ற பெண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது.

சம்பவத்தன்று அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ரஞ்சிதா கோபித்துக்கொண்டு அதேபகுதியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் சக்திவேல் உடலில் மண்எண்ணெயை ஊற்றி கொண்டு மாமனார் வீட்டுக்கு சென்று மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார்.

அவர் வர மறுத்ததால் மதுபோதையில் இருந்த சக்திவேல் உடலில் தீவைத்து கொண்டார். உடல் கருகிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சக்திவேல் நேற்று பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மனைவி குடும்பம் நடத்த வரமறுத்ததால் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com