அடுப்பு பற்ற வைத்தபோது உடலில் தீப்பிடித்த கல்லூரி மாணவி பலி

அடுப்பு பற்ற வைத்தபோது உடலில் தீப்பிடித்த கல்லூரி மாணவி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணம்
மரணம்
Published on

கீரனூர்:

கீரனூரை அடுத்த ஒடுக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் சவுமியா(வயது 18). இவர், புதுக்கோட்டையில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் உள்ள விறகு அடுப்பை பற்ற வைத்தார். அப்போது விறகில் சரியாக தீ பிடிக்காததால் மண்எண்ணெயை எடுத்து அடுப்பில் ஊற்றியதாக கூறப்படுகிறது. அப்போது ‘குபீர்' என்று விறகில் பிடித்த தீ சவுமியா உடையிலும் பிடித்து எரிய தொடங்கியது. அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து சவுமியா உடலில் பற்றிய தீயை அணைத்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி சவுமியா இறந்தார். இதுகுறித்து கீரனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com