கீழக்கரை அருகே காதலுக்கு எதிர்ப்பு- வாலிபர் தற்கொலை

கீழக்கரை அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

கீழக்கரை:

கீழக்கரை அருகே சின்ன மாயாகுளம் இந்திரா நகரை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் விஜய்ராஜ் (வயது 18) மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.

இவர் ஏர்வாடி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதை பெற்றோர் மற்றும் பெண்ணின் குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.

இதையடுத்து கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்ய முயன்றார். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்.

இந்த நிலையில் காதலித்த பெண் போன் செய்யாததால் மனமுடைந்த விஜய்ராஜ் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து வாலிபரின் தந்தை பால்ராஜ் ஏர்வாடி தர்கா போலீசில் புகார் செய்தார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com