கீழக்கரை அருகே மது விற்றவர் கைது

கீழக்கரை அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

கீழக்கரை:

கீழக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பொத்து முனியாண்டி தலைமையிலான போலீசார் போதை ஒழிப்பு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதனைத்தொடர்ந்து கீழக்கரை முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கீழக்கரை கடற்கரை ஓரமாக ஜாஹிர் உசேன் (வயது43) மது விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 25 மது பாட்டில்களை கீழக்கரை போலீசார் பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து கைது செய்தனர். அதைத் தொடர்ந்து சீதக்காதி சாலையில் 15 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com