கயத்தாறு அருகே வேன்- மோட்டார்சைக்கிள் மோதல்: ஆட்டோ டிரைவர் பலி

கயத்தாறு அருகே வேன்- மோட்டார்சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் ஆட்டோ டிரைவர் பலியானார்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

கயத்தாறு:

கயத்தாறு அருகே உள்ள பன்னீர்குளம் நடுத்தெருவை சேர்ந்தவர் விவசாயி முத்துப்பாண்டியன். இவருக்கு 2 மகன்கள். இதில் மூத்த மகன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார்.

2-வது மகன் சுடலை (வயது 20). கயத்தாறில் ஆட்டோ ஓட்டி வந்தார். இந்த நிலையில் சுடலை நேற்று முன்தினம் மாலை கயத்தாறில் இருந்து கங்கைகொண்டான் அருகே வடகரை கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார்.

அரசன்குளம் அருகே நாற்கர சாலையில் செல்லும்போது ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. இந்த வேன் திடீரென டயர் வெடித்ததில் ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கத்திற்கு ஓரமாக சென்றதால் திடீரென சுடலை தனது இரு சக்கர வாகனத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாமல் வேனின் பின்புறத்தில் மோதினார்.

இதில் பலத்த காயமடைந்த அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அதிகாலையில் சுடலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com