காவேரிப்பாக்கம் அருகே நள்ளிரவில் நடுரோட்டில் லாரி தீப்பிடித்து எரிந்தது

காவேரிப்பாக்கம் பஸ் நிலையம் அருகே நள்ளிரவில் நடுரோட்டில் லாரி தீப்பிடித்து எரிந்தது. இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

காவேரிப்பாக்கம்.

ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் இருந்து பெங்களூருக்கு சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான கண்ணாடிகளை ஏற்றிக்கொண்டு லாரி சென்றது. திருச்சியை சேர்ந்த சதிஷ் குமார் என்பவர் லாரியை ஓட்டி வந்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் பஸ் நிலையம் அருகே நள்ளிரவில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரியின் முன்பகுதியில் உள்ள ரேடியேட்டர் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது.

உடனடியாக டிரைவர் லாரியை நிறுத்தி பார்த்தார். அப்போது என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ அதிகமாக பற்றியது. இதனால் தீ மளமளவென பரவியது.

ராணிப்பேட்டை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

அதற்குள் லாரி முழுமையாக எரிந்து சேதமானது. லாரியில் இருந்த கண்ணாடிகள் வெடித்து சிதறியது. லாரியில் இருந்து வந்த புகையினால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். சாலை எங்கும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

இதனால் சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலையில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது தொடர்பாக காவேரிப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com