கீழ்ப்பாக்கத்தில் மதுபோதையில் ரகளை: காசிமேடு போலீஸ்காரர் சஸ்பெண்டு

சென்னை கீழ்ப்பாக்கத்தில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட காசிமேடு போலீஸ்காரரை சஸ்பெண்டு செய்து வடசென்னை இணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
சஸ்பெண்டு
சஸ்பெண்டு
Published on

சென்னை:

சென்னை கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வருபவர் வேல்ராஜ்.

இவர் கீழ்ப்பாக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த லாரன்ஸ், சந்தோஷ் காசிமேடு போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ்காரர் விமல் குமார் ஆகியோர் நடைபாதையில் மது அருந்தினர்.

மேலும் மதுபோதையில் இருசக்கர வாகனம் மற்றும் கார் ஆகியவற்றையும் சேதப்படுத்தி ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனை கீழ்ப்பாக்கம் போலீஸ்காரர் வேல்ராஜ் தட்டிக்கேட்டபோது அவரையும் மிரட்டி தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். இது தொடர்பான புகாரின் பேரில் லாரன்ஸ், சந்தோஷ் இருவரையும் கீழ்ப்பாக்கம் போலீசார் கைதுசெய்தனர்.

இந்தநிலையில் ரகளையில் ஈடுபட்ட காசிமேடு போலீஸ்காரர் விமல் குமார் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். அவரை பணியிடை நீக்கம் செய்து வடசென்னை இணை ஆணையர் துரைகுமார் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com