கரூர் அருகே லாட்டரி சீட்டுகள் விற்ற 3 பேர் கைது

கரூர் அருகே லாட்டரி சீட்டுகள் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

கரூர்:

கரூர் வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செம்மடை மற்றும் புதூர் பிரிவு ரோடு பகுதியில் லாட்டரி சீட்டுகளை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த அன்பு (வயது 42), ராஜேந்திரன் (50) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதேபோல் வெங்கமேடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, பஞ்சமாதேவி பகுதியில் லாட்டரி சீட்டுகள் வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த சரவணன் (42) என்பவரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com