கரூர் அருகே கள் விற்ற முதியவர் கைது

கரூர் அருகே கள் விற்ற முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

நொய்யல்:

கரூர் மாவட்டம், புன்னம் சத்திரத்திலிருந்து காகித ஆலைக்கு செல்லும் சாலையில் உள்ள கொங்கு நகரில் ஒரு தென்னந்தோப்பில் கள் விற்பனை செய்யப்படுவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது அங்கு கள் விற்றுக் கொண்டிருந்தது தெரிய வந்தது. அதன்பேரில், கொங்கு நகர் இரண்டாவது தெருவை சேர்ந்த முருகேசன்(வயது 60) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், குடத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கள்ளும் பறிமுதல் செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com