கருங்கல் அருகே முதியவர் தற்கொலை

கருங்கல் அருகே முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

கருங்கல்:

கருங்கல் அருகே உதயமார்த்தாண்டம் காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் பாலையன்(வயது 75). இவருடைய மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இதனால் அவர் மனவருத்தத்தில் இருந்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டுள்ளார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலையன் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com