காரிமங்கலம் அருகே விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு

காரிமங்கலம் அருகே விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருட்டு
திருட்டு
Published on

காரிமங்கலம்:

காரிமங்கலம் அருகே ஜொல்லம்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 70). விவசாயி. இவர் நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்தில் ஆடு மேய்ப்பதற்காக சென்றார். பின்னர் மாலையில் திரும்பி வந்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோ திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 4 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இந்த திருட்டு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com