போதை ஏறுவதற்காக ஊமத்தை காய் சாறு கலந்து மது விற்ற வாலிபர் கைது

போதை ஏறுவதற்காக ஊமத்தை காய் சாறு கலந்து மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

காரிமங்கலம்:

காரிமங்கலம் அருகே உள்ள மாட்லாம்பட்டி பகுதிகளில் அனுமதியின்றி மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காரிமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் சங்கர் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உத்தாரன்கொட்டாய் பகுதியை சேர்ந்த ராமன் (வயது 24) என்பவர் வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலி மதுபானம் தயாரித்து, அதில் போதை ஏறுவதற்காக ஊமத்தை காயின் சாற்றை கலந்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமனை கைது செய்தனர். மேலும் வீட்டில் விற்பனைக்காக வைத்திருந்த 27 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com