கண்ணமங்கலம் அருகே இளம்பெண் தற்கொலை

கண்ணமங்கலம் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அருகே உள்ள ரெட்டிபாளையம் ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் சத்தியசீலன். இவருடைய மகள் சூர்யா (வயது 17), தனியார் பேன்ஸி ஸ்டோரில் வேலை பார்த்து வந்தார். சூர்யா, போனில் பேசுவது தொடர்பாக சத்தியசீலனுக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சூர்யா, கடந்த 1-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது மண்எண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கண்ணமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com