கண்ணமங்கலம் அருகே கல்குவாரி பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி

கண்ணமங்கலம் அருகே கல்குவாரி பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அருகே உள்ள ஒண்ணுபுரம் கிராமத்தில் வி.வி.தாங்கல் மலையில் கல்குவாரி உள்ளது. இந்த குவாரி குத்தகை காலம் முடிவடைந்ததால் கடந்த ஓராண்டாக செயல்படவில்லை. இதனருகில் ஜல்லி உடைக்கும் எந்திரம் உள்ளது. இதனை குண்ணத்தூரைச் சேர்ந்த சித்திக்பாஷா என்பவர் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை பாறைகளை வெடிவைத்து தகர்க்கும் டிராக்டர் வண்டியை புதுப்பேட்டை பாலாஜி நகரை சேர்ந்த முனிசாமி (வயது45) என்பவர் கல்குவாரி பள்ளத்தின் அருகே ஓட்டிச்சென்றார். அவருடன் ஜல்லி நிறுவன ஊழியர் ரெட்டிபாளையம் அழகேசன் (55) என்பவரும் சென்றார். அப்போது திடீரென டிராக்டர் கல்குவாரி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் முனிசாமி டிராக்டரில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அழகேசனிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, டிராக்டரை கழுவுவதற்காக ஓட்டிச்சென்றபோது கவிழ்ந்தது என தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com