கண்ணமங்கலம் அருகே வேன் மோதி முதியவர் பலி

கண்ணமங்கலம் அருகே வேன் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அருகே உள்ள சேதாரம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சாமிக்கண்ணு (வயது 68). உடல்நிலை பாதிப்பு காரணமாக சந்தவாசலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தனது பேரன் ஒண்ணுபுரம் கிராமத்தைச் சேர்ந்த யுவராஜ் (25) என்பவரது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

பாளைய ஏகாம்பரநல்லூர் குன்றுமேடு பகுதியில் எதிரே கியாஸ் சிலிண்டர் ஏற்றிக்கொண்டு வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சாமிக்கண்ணு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். யுவராஜ் காயம் அடைந்தார். விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து கண்ணமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com