காஞ்சீபுரத்தில் நிதி நிறுவன பெண்ணிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு

காஞ்சீபுரத்தில் நிதி நிறுவன பெண்ணிடம் 10 பவுன் சங்கிலி பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகை பறிப்பு
நகை பறிப்பு
Published on

காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் அருகே சிறுகாவேரி பாக்கத்தை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது 36). இவர் காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் சன்னதி தெருவில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் இரவு கடையை பூட்டிவிட்டு தனது மொபட்டில் வீட்டுக்கு அருகே வந்தபோது, அவரைப் பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர் அவர், அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இச்சம்பவம் தொடர்பாக ஜெயலட்சுமி பாலுசெட்டி சத்திரம் போலீசில் புகார் செய்தார். காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு எஸ்.மணிமேகலை, பாலுசெட்டி சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காஞ்சீபுரம் ஒலிமுகம்மது பேட்டை, சிறுகவேரிபாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com