சட்டத்திற்கு உட்பட்டு பிரச்சாரம் செய்வேன் -கமல் ஹாசன்

சீரமைத்த தமிழகத்தை உருவாக்குவதை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்ய உள்ளதாக கமல் ஹாசன் தெரிவித்தார்.
கமல் ஹாசன்
கமல் ஹாசன்
Published on

சென்னை:

“சீரமைப்போம் தமிழகத்தை” என்ற முழக்கத்துடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தனது முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தை இன்று மதுரையில் தொடங்குகிறார். இதற்காக இன்று மதியம் சென்னையில் இருந்து புறப்பட்ட அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உங்கள் வாழ்த்துக்களுடன் பிரச்சாரம் செய்ய புறப்படுகிறேன். பல இடங்களில் எங்கள் பிரச்சாரத்திற்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள். நகர பகுதிகளில் பிரசாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அனுமதி கொடுக்கிறார்களா என்று பார்ப்போம். சட்டத்திற்கு உட்பட்டு பிரச்சாரத்தை செய்வேன்.

சீரமைத்த தமிழகத்தை உருவாக்குவதை முன் நிறுத்தி பிரசாரம் செய்வோம். தமிழகம் சீரழிந்துவிட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அது மக்களுக்கே தெரியும். அதை கூறி புலம்பிக்கொண்டிருப்பதில் பிரயோஜனம் இல்லை. இனி செய்ய வேண்டியவை பற்றி மக்கள் நீதி மய்யம் பேசும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com