பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வு மக்கள் மீது நிகழ்த்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் - கமல்ஹாசன்

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வு மக்களின் மீது மத்திய அரசு நிகழ்த்தியுள்ள சர்ஜிக்கல் ஸ்டிரைக் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன்
கமல்ஹாசன்
Published on

சென்னை:

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதேபோல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ஒரே மாதத்தில் ரூ.75 உயர்ந்துள்ளது.

இந்நிலையில், பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வு மக்களின் மீது மத்திய அரசு நிகழ்த்தியுள்ள சர்ஜிக்கல் ஸ்டிரைக் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பெட்ரோல்,டீசல் விலை அன்றாடம் உயர்ந்து கொண்டே இருக்கிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ஒரே மாதத்தில் ரூ.75 உயர்ந்துள்ளது. மத்திய அரசு மக்களின் மீது நிகழ்த்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் இது. இந்த அக்கறையற்ற போக்கினால் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயர்ந்து ஏழ்மை அதிகரிக்கும் என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com