கழுகுமலை அருகே விபத்தில் முதியவர் பலி

கழுகுமலை அருகே விபத்தில் முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

கழுகுமலை:

கழுகுமலை கிட்டங்கி தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி (வயது 65). இவர், நேற்று காலை 9 மணி அளவில் மொபட்டில் செல்லும்போது பழங்கோட்டை ரோடு தீப்பெட்டி தொழிற்சாலை முன்பு உள்ள வேகத்தடையில் ஏறி இறங்கும் போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து கழுகுமலை இன்ஸ்பெக்டர் சோபா ஜென்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com