கள்ளிக்குடி அருகே மது விற்ற 2 பேர் கைது

கள்ளிக்குடி அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

திருமங்கலம்:

கள்ளிக்குடி அருகே உள்ள சென்னம்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னழகு (வயது35). இவருடைய வீட்டில் மதுபாட்டில்கள் விற்பதாக கள்ளிக்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கள்ளிகுடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குபேந்திரன் தலைமையில் போலீசார் பொன்னழகு வீட்டைச் சோதனை செய்தனர். அப்போது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 61 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து பொன்னழகை கைது செய்தனர். இதேபோல் கள்ளிகுடியைச் சேர்ந்த அம்மாவாசை (65) வீட்டிலும் 20 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com