

நெல்லை:
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் வணியமுத்து. இவரது மனைவி சிவனம்மாள் (வயது 75). இவர் அந்த வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவ்வப்போது இவரது உறவினர்கள் சென்று பார்த்து வந்தனர். இந்தநிலையில் சாத்தான் குளத்தைச் சேர்ந்த அவரது அக்காள்மகள் சிவனம்மாளை பார்க்க நேற்று வீட்டிற்கு சென்றார். அப்போது சிவனம்மாள் படுக்கையில் பிணமாக கிடந்தார்.