கல்லக்குடி அருகே மோட்டார் சைக்கிள் மோதி பாத யாத்திரை சென்ற பெண் பலி

கல்லக்குடி அருகே மோட்டார் சைக்கிள் மோதி பாத யாத்திரை சென்ற பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

கல்லக்குடி:

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கரைவெட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பழனியப்பன் மனைவி சங்குபதி (வயது 50). இவரும், இவரது கிராமத்தை சேர்ந்த பெண்கள் சுமார் 40 பேர் பழனிக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தனர். திருச்சி மாவட்டம் முதுவத்தூர் அருகே சென்ற போது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் சங்குபதி மீது மோதியது. இதில் கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த முதுவத்தூரை சேர்ந்த காமராஜ் (32), முத்துக்குமார் (31) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com