காளையார்கோவில் அருகே வாகனம் மோதி வாலிபர் பலி

காளையார்கோவில் அருகே வாகனம் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

காளையார்கோவில்:

கோயம்புத்தூர் கவுண்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்த அழகிரிசாமி என்பவரது மகன் செல்வராஜ் (வயது38). இவர் கூலி வேலை செய்து வருகிறார். காளையார்கோவில் அருகே உள்ள கண்டனிப்பட்டியைச் சாந்தி (35) என்பவரை சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். சமீபத்தில் மனைவியின் சொந்த ஊருக்கு வந்தவர் காளையார்கோவிலுக்கு தனது இருசக்கர வாகனத்தில் வந்து விட்டு திரும்பிச்சென்றார். அப்போது மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஜெபத்தோட்டம் அருகே சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் இவரது இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் காளையார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com