கலவை அருகே தீக்குளித்து கட்டிட மேஸ்திரி தற்கொலை

கலவை அருகே தீக்குளித்து கட்டிட மேஸ்திரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

கலவை:

கலவை தாலுகா மேல்புதுபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 35), கட்டிட மேஸ்திரி. இவர் உடல்நலக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனவேதனை அடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை தன் மீது ஊற்றிக் கொண்டு கொளுத்தி கொண்டார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வாழைப்பந்தல் இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com