கலசபாக்கம் அருகே 2 வீடுகளில் ரூ.9 லட்சம் நகை - பணம் திருட்டு

கலசபாக்கம் அருகே 2 வீடுகளில் ரூ.9 லட்சம் மதிப்பிலான நகை-பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கொள்ளை
கொள்ளை
Published on

கலசபாக்கம்:

கலசபாக்கம் தாலுகா கோவில்மாதிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் விசுவநாதன் (வயது 31), விவசாயி. இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் விவசாய நிலத்திற்கு சென்றுவிட்டார்.

பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதேபோல் அதே பகுதியை சேர்ந்த சத்யநாராயணன் என்பவரது மனைவி வளர்மதி (40). இவரது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் 5 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து விசுவநாதன், வளர்மதி தனித்தனியாக கடலாடி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு சென்று கைரேகைகளை பதிவு செய்தனர்.

2 வீடுகளிலும் திருட்டு போன நகை - பணத்தின் மதிப்பு சுமார் ரூ.9 லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை - பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com