களக்காடு அருகே பண்ணை வீட்டை உடைத்து ரூ.1லட்சம் கொள்ளை

களக்காடு அருகே பண்ணை வீட்டை உடைத்து ரூ.1லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை
கொள்ளை
Published on

நெல்லை:

களக்காடு அருகே உள்ள கீழ காடுவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 37). இவர் ஊருக்கு வெளியே உள்ள விஜய குமார் என்பவரது தோட்டத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த வாரம் இவர் வெளியூர் சென்றுவிட்டு தோட்டத்திற்கு சென்றபோது, தோட்டத்தில் உள்ள பண்ணை வீட்டு கதவு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் தோட்டத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் உடைத்து திருடப்பட்டிருந்தது.

பண்ணை வீட்டில் இருந்த கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் இரண்டு நீர்மூழ்கி மோட்டார் உள்பட ரூ 1.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. இதுகுறித்து மாரிமுத்து களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com