குளித்தலை அருகே கதண்டுகள் கடித்து மூதாட்டி பலி

குளித்தலை அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டியை கதண்டுகள் கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

குளித்தலை:

குளித்தலை அருகே உள்ள இ.புதூர் பகுதியை சேர்ந்தவர் காவேரி (வயது 64). சம்பவத்தன்று இவர் அப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் கூடுகட்டி இருந்த கதண்டுகள் பறந்து வந்து காவேரியை பல இடங்களில் கடித்துள்ளது. இதனால் வலி தாங்க முடியாமல் தவித்த அவரை உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி காவேரி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com