

ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த பழைய ஜோலார்பேட்டை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 47). இவர் ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் வருவாய் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் படுக்கையறையில் தூக்குப்போட்டு கொண்டார். இந்த நேரத்தில் வெளியில் சென்றிருந்த மனைவி ஹேமலதா மற்றும் குழந்தைகள் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் சுப்பிரமணி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது.
இது குறித்து ஹேமலதா கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.