

ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டையை அடுத்த சந்தைக்கோடியூர் நேதாஜி தெருவை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் பாண்டு என்கிற பிரவீன் குமார் (வயது 27). இவர் கடந்த 2016-ம் ஆண்டு முதல் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் பிரவீன் குமார் கடந்த மாதம் 13-ந் தேதி விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது தந்தை முத்துசாமி கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து, பிரவீன்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.