கருங்கல் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு

கருங்கல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 3¼ பவுன் நகையை 2 வாலிபர்கள் பறித்து சென்றனர்.
நகை பறிப்பு
நகை பறிப்பு
Published on

கருங்கல்:

கருங்கல் அருகே மிடாலக்காடு பகுதியை சேர்ந்த ராபர்ட் வினோ மனைவி சாரதா (வயது 36). இவர் கருங்கலில் உள்ள மருந்து கடையில் வேலை பார்த்து வருகிறார். 

சம்பவத்தன்று சாரதா வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். உலகன்விளை பகுதியில் சென்ற போது பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 பேர் பின்தொடர்ந்து வந்தனர். திடீரென பின்னால் அமர்ந்திருந்த ஒருவர் சாரதாவின் கழுத்தில் கிடந்த 3½ பவுன் தங்கச்சங்கிலியை பறித்தாா். 

இதில் சங்கிலி இரண்டாக அறுந்தது. மர்மநபர் கையில் 3¼ பவுன் சிக்கியது. உடனே மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் மர்ம நபர்கள் தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com