ஆண்டிபட்டி அருகே விவசாயிடம் நகை-பணம் கொள்ளை

ஆண்டிபட்டி அருகே விவசாயிடம் நகை-பணம் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கொள்ளை
கொள்ளை
Published on

ஆண்டிபட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே டி.அணைக்கரை பட்டியை சேர்ந்தவர் செல்வேந்திரன்(53). விவசாயி. ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரத்தில் உள்ள தனியார் வங்கியில் நகைளை அடகு வைத்திருந்தார். நேற்று மதியம் அடகுவைத்த 10½ பவுன் நகையை திருப்பினார்.

மேலும் அதனுடன் ரூ.1லட்சத்தை தனது மோட்டார் சைக்கிளில் வைத்துவிட்டு கடைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது பணம் மற்றும் நகை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து சிசிடிவி கேமிரா பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர். ஆண்டிபட்டி பகுதியில் தொடர்ந்து திருட்டு, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com