பாபநாசம் கோவிலில் திருடப்பட்ட 25 பவுன் நகை மீட்பு- 2 ஊழியர்கள் கைது

பாபநாசம் கோவிலில் நகைகளை திருடிய 2 ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 25 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
நகை திருட்டு நடந்த பாபநாசம் பாபநாசநாதர் சுவாமி கோவில்.
நகை திருட்டு நடந்த பாபநாசம் பாபநாசநாதர் சுவாமி கோவில்.
Published on

விக்கிரமசிங்கபுரம்:

நெல்லை மாவட்டம் பாபநாசம் பாபநாசநாதர் சுவாமி கோவிலில் உள்ள நகைகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் நிர்வாகத்தினர் ஆய்வு செய்தனர். அப்போது கோவிலில் 25 பவுன் தங்க நகைகள் மாயமானது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ் தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து கோவில் ஊழியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கோவிலில் பணிபுரியும் ஊழியர்களான விக்கிரமசிங்கபுரம் பழைய ஆபிஸ் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் சுடலைமுத்து (வயது 33), டாணா வாட்ச்மேன் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன் (22) ஆகிய 2 பேரும் சேர்ந்து கோவிலில் நகைகளை திருடியது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்து, அவர்களிடம் இருந்த 25 பவுன் நகைகளை மீட்டனர். கோவில் நகைகளை ஊழியர்களே திருடிய சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com