ஜீயபுரம் அருகே லாட்டரி சீட்டுகள் விற்ற 3 பேர் கைது

ஜீயபுரம் அருகே லாட்டரி சீட்டுகள் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

ஜீயபுரம்:

ஜீயபுரம் அருகே உள்ள அல்லூர் மாரியம்மன் கோவில் தெருவில் லாட்டரி சீட்டு விற்றதாக கடிகுறிச்சி மேல தெருவை சேர்ந்த சுப்பிர மணியை (வயது 60) ஜீயபுரம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.240, லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுபோல் திருவெள்ளறை கடை வீதியில் லாட்டரி சீட்டு விற்பதாக செங்கிலிபட்டியை சேர்ந்த நடராஜனை (48) மண்ணச்ச நல்லூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1,000 மற்றும் லட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் காட்டுப்புத்தூரில் லாட்டரி சீட்டு விற்றதாக கரடிபட்டியைச் சேர்ந்த மூக்குத்தி முருகனை (42) காட்டுப்புத்தூர் போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com