வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகைகள் திருட்டு

ஜீயபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகைகள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை
கொள்ளை
Published on

ஜீயபுரம்:

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே உள்ள அல்லூர் ஜனதா நகரை சேர்ந்தவர் சம்பத் குமார் (வயது 70). இவருடைய மனைவி ஹேமலதா(64). இருவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டு மாடியில் உள்ள அறையில் தூங்கிக்கொண்டிருந்தனர். அதிகாலை எழுந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவை கடப்பாரையால் நெம்பி, அதில் இருந்த 4 பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com