‘உபா’ சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்- ஜவாஹிருல்லா

உரிமைக்காக போராடுவோர் மீது பாயும் ‘உபா’ சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஜவாஹிருல்லா வலியுறுத்தயுள்ளார்.
ஜவாஹிருல்லா
ஜவாஹிருல்லா
Published on

சென்னை:

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மனித உரிமைப் போராளிகள், சமூக செயற்பாட்டாளர்கள், பல்வேறு உரிமைகளுக்காகப் போராடும் சாமானிய மக்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உபா எனும் சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

ஆனால் இவர்கள் மீது என்.ஐ.ஏ. என்னும் தனி காவல்படை சுமத்திய குற்றச்சாட்டுகளை நீதிமன்றங்களில் நிரூபிக்க முடியாமல் திணறுவது நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் வெளியிட்டுள்ள புள்ளிவிபரம் அம்பலப்படுத்துகின்றது.

பா.ஜ.க. ஆளும் கர்நாடகம், அசாம், உ.பி., அரியானா, நாகலாந்து மாநிலங்களிலும் பா.ஜ.க.வின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜம்மு காஷ்மீர், தமிழ்நாடு, பீகார் ஆகிய மாநிலங்களிலேயே அதிகமான எண்ணிக்கையில் இந்த உபா சட்டம் சட்ட விரோதமாக சாமானியர்கள் மீது பாய்ந்துள்ளது.

அப்பாவிகள் மீது அநியாயமான முறையில் பாய்ந்து கொண்டிருக்கும் இந்த உபா சட்டம் இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் நடைமுறையில் இருப்பது பெரும் இழுக்காகும். உபா சட்டத்தை ரத்து செய்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப்பெற ஜனநாயகத்தை நேசிக்கும் அனைத்து கட்சிகளும் இயக்கங்களும் மத்திய அரசை ஒருமித்து வலியுறுத்தி போராட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com