ஜலகண்டாபுரம் அருகே தறிக்கூட உரிமையாளர் தற்கொலை

ஜலகண்டாபுரம் அருகே தறிக்கூட உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

மேச்சேரி:

ஜலகண்டாபுரம் அருகே உள்ள சவுரியூர் மீனாட்சி நகர் பகுதியை சேர்ந்தவர் தியாகு (வயது 36). தறிக்கூட உரிமையாளர். இவருக்கு திருமணம் ஆகி 4 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவருடைய மனைவி இவரை பிரிந்து ஒரு வருடம் ஆகிறது. இதனால் அவர் தனிமையில் வசித்து வந்தார். மேலும் மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அவர் வர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட தியாகு, குருணை மருந்தை (விஷம்) சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஜலகண்டாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com