இண்டூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 650 பேர் மீது வழக்கு

இண்டூரில் சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பாக 650 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
வழக்கு பதிவு
வழக்கு பதிவு
Published on

தர்மபுரி:

தர்மபுரி அருகே உள்ள இண்டூரில் மின்வாரிய அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த அலுவலகத்தை அதகபாடிக்கு இடமாற்றம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இண்டூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பாக 650 பேர் மீது இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com