இந்திய பெண் பத்திரிகையாளருக்கு புலிட்சர் பரிசு

சீனாவில் உய்குர் முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயத்தை உலகுக்கு அம்பலப்படுத்தியவர் இந்திய வம்சாவளி பெண் மேகா ராஜகோபாலன் ஆவார்.
மேகா ராஜகோபாலன்
மேகா ராஜகோபாலன்
Published on

சீனாவில் ஜின்ஜியாங் மாகாணத்தில் லட்சக்கணக்கான உய்குர் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்களை ஜின்பிங் அரசு செய்து வருவதாக உலகளாவிய குற்றச்சாட்டு உண்டு. இந்த இன மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த பெண்களுக்கு கட்டாய கருத்தடை சாதனங்கள் பொருத்தப்படுவதாகவும் புகார்கள் வந்தன.

இந்த உய்குர் இன மக்களை லட்சக்கணக்கில் பிடித்து அடைத்து வைப்பதற்கு சீனா ரகசிய கட்டமைப்புகளையும் உருவாக்கியது.

இந்த ரகசிய கட்டமைப்புகளை புலனாய்வு செய்து கண்டுபிடித்து உலக அரங்குக்கு அம்பலப்படுத்தியதில் இந்திய வம்சாவளி பெண் பத்திரிகையாளர் மேகா ராஜகோபாலனுக்கு முக்கிய பங்கு உண்டு. அவருடன் மேலும் இருவருக்கு பங்களிப்பு இருக்கிறது. அவர்கள், அலிசன் கில்லிங் மற்றும் கிறிஸ்டோ புஷ்செக் ஆவார்கள்.

சினிமா துறையினருக்கு ஆஸ்கார் விருது போல பத்திரிகையாளர்களுக்கு புலிட்சர் விருது தனி கவுரவம் ஆகும். அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகம்தான் இந்த விருதை 100 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

லண்டனில் உள்ள மேகா ராஜகோபாலன், புலிட்சர் விருதுஅறிவிக்கப்பட்டிருப்பதற்கு மகிழ்ச்சியும், அதிர்ச்சியும் ஒரு சேர தெரிவித்திருக்கிறார். இவர் அமெரிக்காவின் ‘புஸ்பீட்நியூஸ்’ இணையதள செய்தி நிறுவனத்துக்காக லண்டனில் பணியாற்றி வருகிறார்.

சீனா இவருக்கு தடை விதித்த நிலையில், கஜகஸ்தான் நாட்டில் போய் ஜின்ஜியாங்கில் அடைபட்டுக்கிடந்தவர்களை சந்தித்து பேசி சீனாவின் அட்டூழியத்தை தீரத்துடன் அம்பலப்படுத்தியதற்கு 15 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.11 லட்சம்) ரொக்கப்பரிசைக் கொண்ட இந்த புலிட்சர் பரிசு மேகாராஜகோபாலனுக்கு வழங்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com