தர்மபுரி அருகே ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற இந்திய மாணவர் சங்கத்தினர் கைது

தர்மபுரி அரசு கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற இந்திய மாணவர் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

தர்மபுரி:

தர்மபுரி அரசு கலைக்கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாணவர்கள் நேற்று திரண்டனர். அரியலூர் மாவட்டத்தில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்தும், அதில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் கோஷங்கள் எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த அதியமான்கோட்டை போலீசார், இந்திய மாணவர் சங்க மாவட்ட நிர்வாகி தமிழ் அமுதன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com