இந்திய விமானப்படை குரூப் கேப்டன் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கி கவுரவம்

பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தி வீர தீர செயல் புரிந்ததற்காக அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அபிநந்தனுக்கு விருது வழங்கிய காட்சி
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அபிநந்தனுக்கு விருது வழங்கிய காட்சி
Published on

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று பாதுகாப்பு துறை சார்ந்த விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்பட தலைவர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் வீரதீர செயல்களில் ஈடுபட்ட வீரர்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய விமானப்படை குரூப் கேப்டன் கமாண்டர் அபிநந்தனுக்கு நாட்டின் மூன்றாவது உயரிய விருதான வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.

இந்த விருதினை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தி வீர தீர செயல் புரிந்தததற்காக அபிநத்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019-ம் ஆண்டு ஸ்ரீநகரில் நடைபெற்ற புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் அப்போது இந்திய போர் விமானியாக இருந்த அபிநந்தன் பாகிஸ்தானில் சிக்கிக் கொண்டார்.  பின்னர், இரு நாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தைக்கு பிறகு, அபிநந்தன் விடுவிக்கப்பட்டார். அபிநந்தனின் வீரம் மற்றும் துணிச்சலுக்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com