மாணவிக்கு திருமணம் செய்து வைத்த கணவன்-மனைவி கைது

கொளத்தூர் அருகே கல்லூரி மாணவிக்கு திருமணம் செய்து வைத்த கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

கொளத்தூர்:

கொளத்தூர் அடுத்த காவேரிபுரம் பகுதியை சேர்ந்த 18 வயதான கல்லூரி மாணவியை, அதே பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற வாலிபர் கடத்திச்சென்று விட்டதாக, அந்த மாணவியின் தந்தை, கடந்த ஜூன் மாதம் கொளத்தூர் போலீசில் புகார் அளித்தார். இந்த நிலையில் சென்னையை சேர்ந்த துரை (வயது 42), அவரது மனைவி விஜயா (37) ஆகியோர் அந்த மாணவிக்கும், தமிழ்ச்செல்வனுக்கும் திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தமிழ்செல்வனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மாணவியை மீட்டனர். இதனிடையே இந்த வழக்கில் தொடர்புடைய துரையும், அவரது மனைவி விஜயாவும் தலைமறைவானார்கள். அவர்களை கொளத்தூர் போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com