மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை

கடையம் அருகே மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

கடையம்:

கடையம் அருகே ரவணசமுத்திரம் கிட்டக்கல் தெருவை சேர்ந்தவர் சேக் நூர்முகமது என்ற முகம்மது மைதீன்(வயது 76). இவரது மனைவி மைதீன் பாத்திமா. இவர், கடந்த ஓராண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் முகம்மது மைதீன் மனைவி இறந்த துக்கம் தாளாமல் மிகவும் வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. 

இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் நேற்று காலை வீட்டின் வராண்டாவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த கடையம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com