குப்பை தொட்டியில் வீசப்பட்ட மனித எலும்புக்கூடு- போலீசார் விசாரணை

கைப்பற்றப்பட்ட எலும்பு கூட்டை, தடயவியல் துறை ஆய்வுக்காக போலீசார் ஒப்படைத்து உள்ளனர்.
குப்பை தொட்டியில் வீசப்பட்ட மனித எலும்புக்கூடு
குப்பை தொட்டியில் வீசப்பட்ட மனித எலும்புக்கூடு
Published on

சென்னை:

சென்னை ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்தவர் தங்கபழனி (வயது 45). துப்புரவு பணியாளராக வேலை செய்கிறார். இவர் நேற்று காலை சென்னை சாஸ்திரிநகர் முதல் மெயின் ரோடு, 6-வது குறுக்குதெரு சந்திப்பில் உள்ள குப்பை தொட்டியில் உள்ள குப்பையை அள்ளும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது குப்பை தொட்டியில் இருந்த பிளாஸ்டிக் பையை திறந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அந்த பிளாஸ்டிக் பைக்குள் மனித எலும்பு கூடு ஒன்று இருந்தது. மிகவும் பழமையாக காணப்பட்ட அந்த எலும்பு கூட்டை சாஸ்திரி நகர் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் அந்த எலும்பு கூட்டை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். கொலை செய்யப்பட்ட உடலை மறைத்து வைத்து, தற்போது எலும்பு கூட்டை குப்பை தொட்டியில் வீசி சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்கிறார்கள்.

அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து பார்க்கிறார்கள். எலும்புக் கூடு இருந்த பிளாஸ்டிக் பையை தூக்கி வந்தவரின் உருவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தால், அதை வைத்து விசாரணை நடத்தினால் எலும்புக் கூடு பற்றி துப்பு கிடைக்கும் என்று போலீசார் நம்புகிறார்கள்.

மேலும் கைப்பற்றப்பட்ட அந்த எலும்பு கூட்டை, தடயவியல் துறை ஆய்வுக்காக போலீசார் ஒப்படைத்து உள்ளனர். எலும்புக் கூடு கைப்பற்றப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் நேற்று காலை பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com