மருத்துவமனை பெண் ஊழியரை மிரட்டி பாலியல் பலாத்காரம்- வாலிபர் மீது போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்

குளிப்பதை வீடியோ எடுத்து தனியார் மருத்துவமனை பெண் ஊழியரை மிரட்டி அறையில் அடைத்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

வேலூர்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் நேற்று வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறேன். நானும் எனது தாயாரும் வீட்டில் உள்ள குளியலறையில் குளித்தபோது அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் எங்களுக்கு தெரியாமல் அதனை வீடியோ எடுத்தார். ஒருநாள் அதை என்னிடம் காட்டி அவரது ஆசைக்கு இணங்காவிட்டால் எனது தாயாரின் வீடியோவை வெளியிடுவேன் என என்னை மிரட்டினார்.

இதனால் பயந்து போன நான் அவரை வேலூர் ஓட்டேரி பகுதியில் சந்திக்கச் சென்றேன். அப்போது என்னை அறையில் அடைத்து வைத்து நிர்வாணப்படுத்தி 2 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்தார்.

அதை செல்போனில் படம் எடுத்து அந்த படத்தை என்னிடம் காட்டி மிரட்டி அடிக்கடி பலாத்காரம் செய்து வந்தார். மாதந்தோறும் மிரட்டி ரூ.10 ஆயிரம் பறித்தார். அவரது செயல் எல்லை மீறி போகவே நான் இதைப்பற்றி கடந்த நவம்பர் மாதம் புகார் கொடுத்தேன். அவனை போலீசார் கைது செய்தனர்.

ஆனால் அவன் தற்போது ஜெயிலில் இருந்து வெளியே வந்து எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கிறான். நான் சென்னையில் வேலை பார்த்து வரும் மருத்துவமனைக்கு வந்து என்னை அவமானப்படுத்தி பாலியல் தொல்லை தருகிறார். நீ எங்கு போனாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது. உன் குடும்பத்தில் யாரையாவது வெட்டி கொலை செய்து விடுவேன் என தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார். அவரிடமிருந்து என்னையும் என் குடும்பத்தினரையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com